Monday, 16 May 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (16-5-2016 to 22-5-2016)

மேஷம்:

மேஷநாதன் செவ்வாயும், யோகாதிபதி சூரியனும் இந்த வாரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது நல்ல அமைப்பு என்பதால் மேஷராசிக்கு மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் கிடைக்கும் வாரமாகஇது இருக்கும். உற்சாகம் உள்ள நல்ல வாரம் இது.

மேஷராசிக்காரர்கள் கோபக்காரர்களாக இருந்தாலும் நீதிமான்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளமாட்டீகள். விலை போகவும் மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள்.

அஷ்டமச் சனி நடப்பதால் இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு கவனக்குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும்மேஷராசி இளைஞர்களுக்கு இப்போது இருக்கும் எல்லா பிரச்சனையும் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதால் எதையும்சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.

ரிஷபம்:

ராசியில் சூரியன் அமர்ந்து, ராசிக்கு சனி செவ்வாய்,பார்வை எனமூன்று பாவக் கிரகங்கள் ராசியுடன் சம்பந்தப்பட்டாலும் ராசிநாதன் வலுவாக இருப்பது அனைத்து தோஷங்களையும் விலக்கி உங்களுக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் ரிஷபத்திற்கு யோக வாரமே.

இளையபருவத்தினர் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை உடனடியாக அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும்.

இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

மிதுனம்:

ஆறாமிடத்தில் பாவக்கிரகங்கள்இணைந்து அஷ்டமாதிபதியும் அங்கு மறைவதால் எதிர்பார்க்கும் அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே இருந்து செயல்பட முடியாத நிலைமை இந்தவாரம் மிதுனராசிக்கு ஏற்படலாம் என்றாலும் ராசிநாதனின் வலுவால் அனைத்தையும் சமாளித்து வெற்றி வீரனாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர்பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலகட்டமாக இருக்கும்.

இளைய பருவத்தினர் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். சோதனைகளை சாதனைகளாக நீங்கள் மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வாரம் யோக வாரமே.

கடகம்:

வாரம்முழுவதும் ராசிநாதன் வலுப் பெறுவதும் தனாதிபதியும்,லாபாதிபதியும் பலம் பெற்றிருப்பதும் கடகராசிக்கு பண வரவும், தொழில் மேன்மையும் அளிக்கும் நிலைமை என்பதால் இந்தவாரம் உங்கள் எதிர்கால ஜீவன அமைப்புக்கள் வலுப்பெறுவதற்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இருக்கும்.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கடக ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து வேறுபக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

குருபகவானின் வலுவால் கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

சிம்மம்:

வார ஆரம்பத்தில் ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன்இருப்பதும் தன லாபாதிபதியான புதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் சிம்மராசிக்கு எதிர்மறை பலன்களை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும் அமைப்பு என்பதால் சிம்மராசிக்கு இப்போது கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை.

ராசிநாதனை சனி பார்ப்பதால் அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம். உடன் பணிபுரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது சரிப்பட்டு வராது.

கன்னி:

மூன்றில் இணைந்திருக்கும் சனிபகவானும் செவ்வாயும் ஆறில் இருக்கும் கேது பகவானும் எத்தகைய தடங்கல்கள் வந்தாலும் உங்களைக் கெடுதல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவசஅமைப்பு என்பதால் கன்னிராசிக்கு இந்த வாரம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.சிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் உருவாகும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

துலாம்:

இரண்டு எட்டில் இருக்கும் சனி செவ்வாய் சூரியன் போன்ற பாபக்கிரகங்களால் இந்தவாரம் உங்களின் நிதிநிலைமை சிறிது பாதிக்கப்படலாம் என்றாலும் பாக்யாதிபதி புதன் ராசியைப் பார்ப்பதால் கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள் என்பது உறுதி.

இந்தவாரம் உங்களின் எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

வாரம்முழுவதும் சூரியன்ராசியைப் பார்ப்பதும் பாக்யாதிபதி சந்திரன், வலுவுடன் இருப்பதும் விசேஷமான நிலை என்பதால் தற்போது விருச்சிகராசிக்காரர்கள் அனுபவித்து வரும் மனக்கஷ்டங்களையும், பணப்பிரச்சினைகளையும் இந்த கோட்சார கிரகநிலை அமைப்பு தடுக்கும் என்பது உறுதி.

கேட்டை நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடுவது நல்லது. இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சென்ற காலங்களில் வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான்.

தனுசு:

ராசிக்கு பனிரெண்டாமிடத்தில் செவ்வாய் சனி ஒன்று கூடி ராசிநாதன் ராசியைப் பார்க்கும் நிலையில் இந்தவாரம் ஆரம்பிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு தூரப்பயணங்களும், மாறுதல்களும் உள்ள வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் நாடுவிட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் யோகமும் இருக்கிறது.

குருபகவானின்சுபப்பார்வையால் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.

சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக் கொண்டு வருவது நல்லது. புதிதாக பணம் போட்டு தொழில் விரிவாக்கம் செய்வதோ, கிளைகள் ஆரம்பிப்பதோ இப்போது கை கொடுக்காது.அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்:

ஐந்தில் சூரியன் எட்டில் குரு ராகு என்ற கிரக அமைப்பு விரயங்களையும், செலவுகளையும், மனவருத்தங்களையும் கொடுக்கும் ஒரு அமைப்புதான் என்றாலும்ராசி வலுவடைந்திருப்பதால் கெடுபலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறமையுள்ள நீங்கள் அனைத்தையும் சமாளிக்கும் வாரமாக இது இருக்கும்.

வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிமேல் நடைபெறும். நீண்ட நாட்களாக வரன் பார்த்து அலைந்தும் திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். ஆகஸ்ட் முதல் அதிர்ஷ்டம் ஆரம்பிக்கிறது.

கும்பம்:

நான்கு ஏழு பத்தில் இருக்கும் கிரகங்கள் அனைத்தும் உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி, உழைப்பு இவற்றை ஒரு போதும் தோல்வியடைய வைக்காது என்பதாலும் ராசிக்கு நான்கு கேந்திரத்திலும்கிரகங்கள் இருப்பது யோகம் என்பதாலும் கும்பராசிக்கு இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கும்.

ராகுபகவான் ராசியோடு தொடர்பு கொண்டிருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும்.

வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம் ஊர் மாற்றம் வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்தும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

மீனம்:

வாரம் முழுவதும் வலுப்பெற்று இருக்கும் சந்திரனும், சூரிய செவ்வாயும் உங்களுக்கு தைரியத்தையும் அதன் மூலமாக புகழையும் பெற்றுத் தருவார்கள் என்பதால் இந்தவாரம் நீங்கள் எடுக்கும் காரியம் யாவும் வெற்றியடைந்து உங்களை சந்தோஷத்தில் இருக்க வைக்கும் வாரமாக இருக்கும்.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்துஆகஸ்டுக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

வேலை இழந்தவருக்கும், வேலை தேடுபவருக்கும் ஆகஸ்டு மாதத்திற்கு மேல் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

No comments :

Post a Comment