Friday, 1 April 2016

துலாம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் பரிபூரண உச்சநிலை பெற்றிருக்கிறார். இதுபோல எவருடைய பார்வையும் இன்றி சுக்கிரன் உச்சம் பெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும். அதே நேரத்தில் அவர் ஆறில் மறைந்து வலுப் பெறுவதால் இந்த மாதம் துலாம் ராசிக்கு எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் முதலில் தடைகள் வந்து மாத பிற்பகுதியில் அனைத்துப் பிரச்சினைகளும் உங்களுக்கு சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும்.

மாத பிற்பகுதியில் பணவரவு சரளமாக இருக்கும். பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் என நீண்டகால குறைபாடுகள் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். சிறு உடல்நலக்குறைவு என்றாலும் உடனே கவனிப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களிடமும், பங்காளிகளிடமும், குறிப்பாக அத்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது. இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணிவகுத்து வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு இது சுமாரான மாதமாகத்தான் இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள்.

No comments :

Post a Comment