Friday, 1 April 2016

தனுசு: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

தனுசு:

ஐந்து, ஒன்பதுக்குடைய சூரியனும், செவ்வாயும் உச்சம் மற்றும் ஆட்சி நிலை பெற்று ராசிநாதனும் ராசியைப் பார்ப்பது இந்த மாதம் தனுசுராசிக்கு அனைத்து நன்மைகளையும் லாபங்களையும் தரும் மாதம் என்பதைக் காட்டுக்கிறது. அதே நேரத்தில் சுக்கிரனின் உச்ச நிலையால் ஆறாமிடம் வலுப்பெறுவதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்புகள் உள்ள மாதமாகவும், நடுத்தர வயதுள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டிய மாதமாகவும் இருக்கும்.

அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு தனுசுராசிக்காரர்களுக்கும் நல்லமாதம் இது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி தொல்லைகள் இல்லாமல் ஜாலியான அனுபவங்கள் இருக்கும்.. பெற்றோருக்கு மகன், மகள் விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

அருமையான வீடு கட்ட ஆரம்பங்கள் சிலருக்கு இந்த மாதம் உண்டு. பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள். தந்தையார் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெகுதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். .

No comments :

Post a Comment