Friday, 1 April 2016

மகரம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

மகரம்:

எட்டிற்குடைய சூரியன் மாத பிற்பகுதியில் நான்காமிடத்தில் வலுப்பெறுவதால் இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு தாயார் விஷயத்தில் வருத்தங்களும், செலவுகளும் உள்ள மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயத்தில் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலையும் சிலருக்கு பழைய வாகனங்களால் வீண் விரையங்களும் இருக்கலாம் என்பதால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக ஏப்ரல் மாதம் இருக்கும்.

சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும் சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

இளைஞர்களுக்கு இந்த மாதம், கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சனி எப்போதுமே கொடுத்துக் கெடுப்பார் என்பதால் சனி கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள். மகன் மகளுக்கு திருமணம் உறுதியாகும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் இருக்கும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும்..

No comments :

Post a Comment