Friday, 1 April 2016

மீனம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

மீனம்:

ஒன்பதுகுடையவன் ஆட்சிபெற்று, பத்துக்குடையவன் பத்தாமிடத்தைப் பார்த்து இந்த மாதம் உங்களை சந்தோஷத்திற்கு உள்ளாக்கினாலும் ஆறுக்குடைய சூரியன் மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் உச்ச நிலையில் நிலையில் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த மாதம் வருமானக் குறைவுகளும் அதே நேரத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் மாதமாகவும் இருக்கும்.

உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், யூகத்திறமைக்கும் ஏற்ற மாதம் இது. நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இந்த மாதம் செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சகோதர உறவு மிகவும் நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

பெண்களுக்கு சிறப்புக்கள் வீடு தேடி வரும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். தங்களின் திறமையை முதலீடாகக் கொண்டவர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

No comments :

Post a Comment