Friday, 1 April 2016

விருச்சிகம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

விருச்சிகம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சுபத்துவத்துடன் அமர்ந்து தன் ராசியை வலிமைப்படுத்தும் நிலையோடு இன்னொரு உன்னத அமைப்பாக மாத பிற்பகுதியில் ஜீவனாதிபதி சூரியன் உச்சம் பெறுவதாலும் விருச்சிகத்திற்கு இந்த ஏப்ரல் மாதம் திருப்புமுனை மாதமாக இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலையும் தீர்வும் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

வெற்றித்திருமகன் முருகப்பெருமானின் பூரண அருளுடன் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த மாதம் முழுமையாகக் கிடைப்பதால் இப்போது நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள். சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் இந்தமாதம் நடக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும். சேமிப்புகள் செய்ய முடியும்.

ஆகஸ்டுக்கு மாதத்திற்கு மேல் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாரிசு உருவாகி வீட்டில் தவழ்ந்து விளையாடப் போகிறது. நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குல தெய்வ வழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் தனாதிபதியும் தனகாரகனுமான குருபகவான் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

No comments :

Post a Comment