Friday, 1 April 2016

கடகம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

கடகம்:

மாதம் முழுவதும் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் ஐந்தாம் வீட்டில் ஆட்சி வலுவுடன் இருப்பதும், தனம் வாக்கு ஸ்தானாதிபதி சூரியன் உச்ச நிலையில் இருப்பதும் கடகராசிக்கு நன்மை தரக்கூடிய அமைப்புகள் என்பதோடு இரண்டாமிடத்தில் இணைந்திருக்கும் குரு, ராகுவாலும் இந்த மாதம் உங்களுடைய அனைத்துக் காரியங்களும் வெற்றி பெறும் என்பதால் ஏப்ரல் மாதம் கடகத்திற்கு கவலைகள் தராத மாதமாக இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் வருட பிற்பகுதியில் நடக்கும். இந்த மாதம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும். கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும்.

டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அளவான நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் இப்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

1 comment :