Friday, 1 April 2016

ரிஷபம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

ரிஷபம்:

ஏப்ரல் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சவலுப் பெற்று இருப்பதும் உங்களின் யோகாதிபதியான புதபகவான் நீசநிலை நீங்கியிருப்பதும் நன்மைகளை தரக்கூடிய அமைப்பு என்பதோடு ராசியை சனிபகவான் சூட்சுமவலுப்பெற்று பார்ப்பது இந்த மாதம் ரிஷபத்திற்கு அனைத்து காரியங்களும் தடைகள் எதுவும் இன்றி வெற்றிகரமாகவும் சாதகமாகவும் முடியும் என்பதை காட்டுகிறது.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் மாதம் இது. இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் மறுபடியும் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் அப்போது வேலை கிடைக்கும் ஆகஸ்டு மாதத்திலிருந்து குருபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் எந்தப் பிரச்னையும் இனிமேல் உங்களுக்கு வரப்போவது இல்லை.

No comments :

Post a Comment