Friday, 1 April 2016

மிதுனம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

மிதுனம்:

ஏப்ரல் மாதம் முழுவதும் ஆறாமிடத்தில் சனியும், செவ்வாயும் இருக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதியான சூரியன் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் புதன் நீசநிலை நீங்கியிருக்கிறார். ராசியின் யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றதானால் வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புகளுக்கான பத்தாமிடம் வலுப்பெறுவதால் மிதுனராசிக்காரர்களுக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத மாதமாக இது இருக்கும்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு.. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். மிதுனராசிப் பெண்கள் குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் அனுசரித்து போங்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் ஆக்கலாம் அழிக்கலாம் என்பது உலகவிதி. எந்தக் குடும்பத்தில் அதன் தலைமைப் பெண்மணி விழிப்புடன் இருக்கிறாளோ அந்தக் குடும்பத்தை எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம்.

No comments :

Post a Comment