Friday, 1 April 2016

மேஷம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் அவரது இன்னொரு ராசியில் ஆட்சி பெற்று இருப்பதும் பிற்பகுதியில் ராசியிலேயே உங்களின் யோகாதிபதி ஐந்திற்குடைய சூரியன் உச்ச நிலையில் இருப்பதும் மேஷராசிக்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதோடு பண வரவிற்கு காரணமான சுக்கிரனும் உச்ச நிலையில் இருப்பதால் ஏப்ரல் மாதம் உங்களுக்கு பணவரவுகளும், தொழில் மேன்மைகளும், சந்தோஷ நிகழ்ச்சிகளும் உள்ள மாதமாக இருக்கும்.

உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் இனி கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. அஷ்டமச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

No comments :

Post a Comment