Monday, 28 March 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (28.3.16 - 3.4.16)

மேஷம்:

இந்த வாரம் தனாதிபதி சுக்கிரபகவான் உச்சம் பெறுவதாலும் ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு இருப்பதாலும் மேஷராசிக்கு இது யோகவாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதும் பெண்களால் செலவுகளும் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் இந்த வருடம் நெருக்கடிகள் தோன்றலாம். வேலை தருபவரிடமோ, முதலாளியிடமோ கருத்துவேறுபாடுகள் தோன்றி வேலையை விட்டு விடக்கூடிய சூழல் உருவாகும். எதிலும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

சனிபகவான் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுவது நல்லது. பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சமடைவதாலும் உச்சவலு என்பது ஒருடம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் என்பதாலும் ரிஷபராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு பெண்களின் விஷயத்தால் லாபங்களும், வருமானங்களும் உள்ள வாரமாகவும் இருக்கும்.

அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள்.

சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வர இருக்கும் ஆரம்ப வாரம் இது. இனிமேல் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்:

ஆறில் செவ்வாய், சனி அமர்ந்து ராசிநாதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சியாகி யோகாதிபதி சுக்கிரன் உச்சமடைந்த யோக வாரம் இது என்பதால் மிதுனராசிக்காரர்களின் அனைத்து விஷயங்களிலும் அவரவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும்.

கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வீடு வாங்குவது விஷயமாக ஹவுசிங் லோன் வாங்க வேண்டியிருக்கும். தொழில் வியாபார வேலை இடங்களில் கூடவே சிரித்துப்பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள்.

ராகுபகவான் மூன்றாம் இடத்தில் வலுவாக இருப்பதால் பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் மிதுன ராசிக்காரர்கள் மிகப் பெரிய நன்மைகளை அடையப் போகிறீர்கள் அதாவது ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் நல்ல நிலைமைகளில் இருப்பதாலும் செவ்வாய், சூரியன், குரு ஆகியோர் நன்மை தரும் அமைப்பில் இருப்பதாலும் இந்த வாரம் கடக ராசிக்கு கெடுபலன்கள் எதையும் தராத நல்ல வாரமாகவே இருக்கும். குருபகவான் இரண்டில் இருப்பதால் வருமானங்களும் உண்டு.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கடக ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வாரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஒரு அலுவலகத்திலோ அல்லது ஒரு அமைப்பிலோ தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தனது கீழே இருப்பவர்களை நம்பாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை நம்ப வேண்டாம். இந்த வாரம் சுக்கிரன் உச்சம் பெறுவதால் சிலருக்கு முதுகில் குத்துவது போன்ற விஷயங்கள் நடக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் உச்சமான சுக்கிரனுடன் இணைந்திருப்பதாலும் சுக்கிரனே உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற பத்தாமிடத்திற்கு அதிபதி என்பதாலும் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் முறை சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும் வாரமாக இருக்கும்.

எத்தனை வருடம் பழகியவராக இருந்தாலும் உயிர் நண்பர் என்று உருகுபவராக இருந்தாலும் மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாமல் அவரை அனுசரித்துச் செல்லுங்கள். சாதகமற்ற நேரத்தில் பணிவு காட்டுவதால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை வைக்க வேண்டும். பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது.

கன்னி:

கன்னிநாதன் புதன் எட்டில் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ராஜயோகாதிபதி சுக்கிர பகவான் உச்சம் பெற்று ராசியை பார்க்கிறார். இந்த இரண்டு நிலைகளும் கன்னிக்கு சாதகமான அமைப்புகள் என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் உங்கள் ராசிக்கு சொல்லுவதற்கு இல்லை.

வேலைக்காரர்களின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். பணம் கொடுத்து விடுவதில் யாரையும் நம்ப வேண்டாம். கைப்பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் யோசித்துச் செய்யவும். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிர பகவான் வருடம் ஒரு முறை வலுவாகும் நிலையான உச்ச நிலையை அடைந்திருப்பதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை அமைப்புகள் அனைத்தும் நீங்கி நல்லவைகள் நடக்க துவங்கும் வாரமாக இது இருக்கும் என்பது உறுதி.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வாரம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

விருச்சிகம்:

வாரஇறுதியில் ஏழுக்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதால் இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணை விஷயத்தில் செலவுகள் செய்யும் வாரமாக இருக்கும். அதேநேரத்தில் துணைவரால் சந்தோஷமும், குடும்பத்தில் உற்சாகமும் கிடைக்கும் வாரம் இது.

வெளிநாட்டு வேலை அல்லது இங்கேயே வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்கும் ஏஜண்டுகளை நம்பி கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டாம். ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் பத்து தடவை யோசித்து செய்யுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார். எதிலும் அவசரப்படாதீர்கள்.

தற்போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் கரை தெரிய ஆரம்பிக்கும். ஒரு நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பிடிப்பு வரும். எனவே எதற்கும் கவலைப்பட வேண்டாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் பிறந்து விட்டது.

தனுசு:

ஆறுக்கதிபதி சுக்கிர பகவான் நான்காம் வீட்டில் சூரியனுடன் உச்சம் பெறுவதால் தந்தைவழி சொத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் தந்தையின் வீடு சம்பந்தமான சொத்துவழக்கு பிரச்சினைகளில் நல்லதிருப்பங்களும் இப்போது இருக்கும்.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் உருவாகலாம். எனவே கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் நிதானமாக இருப்பது நல்லது. புதுவீடு வாங்குவதற்காக பழைய வீட்டை விற்று, வீட்டை விற்ற பணம் வேறு வகையில் செலவாகி இருந்த சொந்தவீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்க நேரும் காலம் இது. எங்கும் எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் தனஸ்தானம் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் இந்த வாரத்தின் தடைகளையும் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும்.

மகரம்:

பூரண ராஜயோகாதிபதி சுக்கிரபகவான் இந்த வாரம் உச்சநிலை பெறுவதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி பணவரவுகளும், குழந்தைகளால் சந்தோஷமான செய்திகளும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

செவ்வாயுடன் இணைந்த சனிபகவானின் பார்வை ராசியில் விழுவதால் டென்ஷனும், படபடப்புமாக இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். தாயார் வழியில் செலவுகளும், விரயங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வயதான தாயாரை அக்கறையுடன் கவனியுங்கள்.

மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் படிப்படியாக போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள்.

கும்பம்:

ராசியின் பாக்கியாதிபதி உச்சமாகி ஜீவனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதால் இந்த வாரம் கும்ப ராசிக்காரர்கள் நினைப்பதை நடத்தி காட்டி தங்களின் ஆளுமை திறனையும், அதிர்ஷ்டத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்து காட்டும் வாரமாக இது இருக்கும்.

தந்தைவழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

குருவுடன் இணைந்த ராகுவால் நல்ல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். எப்படி இந்த வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத மறைமுக தனலாபங்களை ராகுபகவான் உங்களுக்குத் தருவார். அரசு சம்பந்தப்பட்டவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறை தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

மீனம்:

எட்டுக்குடைய சுக்கிரன் ராசியில் உச்சமாகி ராசிநாதன் குரு ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது சாதகமற்றநிலை என்று தோன்றினாலும் குருபகவான் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால் எவ்வித கெடுதல்களும் மீனராசிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் வெளிநாடு சம்பந்தப்பட்ட மீன ராசிக்காரர்கள் நல்ல விஷயங்களை இந்த வாரம் எதிர்கொள்வீர்கள்.

சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த வாரம் போட்டியாளர்கள் நெருக்கடிகளை தருவார்கள். சாதாரணமாக சிறிய விஷயம்தானே என்று அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம் பூதாகரமாக உருவெடுத்து நீடித்த தலைவலியை தரும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நிதானமான பலன்களே நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் வரலாம். பொதுவாக அதிர்ஷ்டம் கை கொடுக்காத வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

No comments :

Post a Comment