Saturday, 12 March 2016

கன்னி: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

கன்னி:

ராசிநாதன் புதன் நீசமடைந்தாலும் ராசியை பார்க்கிறார் என்பதாலும் தைரிய ஸ்தானமான மூன்றாமிடத்தில் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் கூடி இருப்பதாலும் கன்னி ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்க முடியாத வாரம் இது.

சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. உங்கள் திறமைகள் வெளிவரும் வாரம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த வாரம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இப்போது நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள்.

இந்த வாரம் கன்னிராசிக்கு வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை கிரகநிலைகள் குறிப்பாக உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதி செய்கின்றன. என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.

1 comment :