Saturday, 12 March 2016

மகரம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

மகரம்:

இந்த வாரம் எட்டுக்குடைய சூரியன் குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மகர ராசிக்கு நன்மைகளை தராத ஒரு அமைப்பு என்றாலும் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயுடன் இணைந்து ராசியை பார்க்கும் நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது.

அதேநேரத்தில் கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த வாரம் நல்லவைகள் நடக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் இப்போது புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியை செவ்வாயுடன் சேர்ந்து பார்க்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த வாரம் சுமாராகத்தான் இருக்கும். கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம்.

No comments :

Post a Comment