Saturday, 12 March 2016

தனுசு: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

தனுசு:

ராசிநாதன் குருபகவானே உங்களுடைய நான்காம் வீட்டிற்கும் அதிபதியாகி ஒன்பதுக்குடையவனான சூரியனுடன் பரிவர்த்தனை ஆவதால் கேந்திர கோணாதிபதிகள் வலுப்பெற்ற அமைப்பில் அமர்ந்து உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல வாரம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும்.

பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்களின் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

1 comment :

  1. sir , dailyum post enaychi podunga, i am a great fan to you sir

    ReplyDelete