Saturday, 12 March 2016

கடகம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் உச்சம் பெற்று வாரம் முழுவதும் நல்ல நிலைகளில் இருப்பதால் கடகத்திற்கு தொட்டது துலங்கும் வாரம் இது. இரண்டிற்குடைய தனாதிபதி சூரியனும், ஒன்பதுக்குடைய குருபகவானும் பரிவர்த்தனை அடைவதால் பண வரவுகளுக்கும் பஞ்சமில்லாத வாரமாகவும் இது இருக்கும்.

குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இந்த வாரம் சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் உங்களுக்கு ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் இருக்கும்.

பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள்.

No comments :

Post a Comment