Saturday, 12 March 2016

சிம்மம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

சிம்மம்:

இன்னும் நான்கு வாரங்களுக்கு ராசிநாதன் சூரியன் ராசியில் இருக்கும் குருபகவானும் பரிவர்த்தனை பெறுவதால் ராசிநாதன் ராசியில் இருக்கும் அமைப்புகள் உண்டாகி சிம்மத்திற்கு சிறப்பான நன்மைகள் இருக்கும் வாரம் இது.

தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள்.

No comments :

Post a Comment