Saturday, 12 March 2016

மிதுனம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

மிதுனம்:

இந்த வாரம் ராசிநாதன் நீசமடைவதால் மிதுன ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகளும், தாமதங்களும் உள்ள வாரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்ப்புகளை குறிக்கும் ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பதால் நீங்கள் எதிலும் வெற்றி பெறும் வாரமாகவும் இது இருக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.

தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். பாக்கியஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இனிமேல் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம்.

1 comment :

  1. sir naa DME complite panni tu B.TECH direct second year join pannirukean .......endha education enakku succesful ahh aamaiyumaaa ?

    ReplyDelete