Saturday, 12 March 2016

கும்பம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

கும்பம்:

வாரம் முழுவதும் ஐந்து எட்டுக்குடைய புதபகவான் நீசமாவதும், தனாதிபதி குருபகவானும் ஏழுக்குடைய சூரியனும் பரிவர்த்தனையாவதும் இந்த வாரம் வாழ்க்கை துணை மூலமாக கும்ப ராசிக்காரர்களுக்கு பொருள் வரவோ, நல்ல விஷயங்களோ உள்ள வாரமாக இருக்கும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள்.

வார ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

1 comment :

  1. சாப்ட்வேர் ட்ரைனிங் விதேஒஸ் இன் தமிழ்
    Software Training Videos In Tamil
    http://goo.gl/pPk30v

    ReplyDelete