Saturday, 12 March 2016

மீனம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

மீனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் குருபகவானும் ஆறுக்குடைய சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் ராசிநாதன் ராசியில் இருக்கும் நிலை உண்டாகி உங்களுடைய சிந்தனை, செயல்திறன் மனோதைரியம் அனைத்தும் சிறப்புடன் இருக்கும் வாரம் இது. அதே நேரத்தில் ஆறாமிடத்தில் பரிவர்த்தனை நடப்பதால் சிலருக்கு அடங்கிக் கிடந்த கடன்தொல்லைகள் மீண்டும் எட்டிப் பார்க்கும் வாரமாகவும் இது இருக்கும்.

பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும்.

1 comment :

  1. Software Training Videos In Tamil
    சாப்ட்வேர் ட்ரைனிங் விதேஒஸ் இன் தமிழ்
    http://goo.gl/pPk30v

    ReplyDelete