Saturday, 12 March 2016

விருச்சிகம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியில் வலுவுடன் அமைர்ந்து ஐந்து, பத்தாம் வீடுகளுக்கு அதிபதிகளான குருவும், சூரியனும் பரிவர்த்தனை அடைவதால் இந்த வாரம் அதிர்ஷ்டமும், தொழிலும் உங்களுக்கு கை கொடுக்கும் வாரம் இது.

அதேநேரத்தில் தொழிலில் கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயமானாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இரண்டுக்குடையவன் அந்த பாவத்தைப் பார்த்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.

சந்திரனின் உச்சபலத்தால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

No comments :

Post a Comment