Saturday, 12 March 2016

துலாம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

துலாம்:

ராசிநாதன் ஐந்தாம் வீட்டில் வலுவாக இருக்கும் நிலைமையில் அவரை இன்னொரு இயற்கை சுபரான குருபகவான் பார்ப்பதால் எதிலும் துலாம் ராசிக்காரர்கள் வெற்றியை மட்டுமே எதிர்நோக்கப்போகும் நன்மையான வாரம் இது.

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதளவிலும் உடல்நிலையிலும் புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. அடுத்தவருடம் ஏழரைச்சனி விலகப் போகிறது என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும்.

No comments :

Post a Comment