Saturday, 12 March 2016

ரிஷபம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

ரிஷபம்:

ராசியை செவ்வாய் சனி பார்த்து வார ஆரம்பத்தில் சந்திரன் ராசியில் உச்சமாக அமர்வதால் இந்த வாரம் உங்களை கோபமும், எரிச்சலும் ஊட்டும் சம்பவங்கள் நடந்தாலும் அனைத்தையும் நிதானமாகவும், மன உறுதியுடனும் நீங்கள் சமாளித்து வெற்றி கொள்ளும் வாரமாக இது இருக்கும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம்.

இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் வாரமாக இது இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும்.

No comments :

Post a Comment