Saturday, 12 March 2016

மேஷம்: மாலைமலர் வார ராசி பலன்கள் (14.3.2016 முதல் 20.3.2016)

மேஷம்

ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து ஐந்துக்குடையவனும், பனிரெண்டிற்குடையவனும் பரிவர்த்தனை பெறுவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் செலவுகளும் பிள்ளைகளால் மனவருத்தங்களும் உள்ள வாரமாக இருக்கும்.
நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

குருபகவான் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்தவைகள் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது.


No comments :

Post a Comment