Monday, 28 December 2015

மாலைமலர் வார ராசிபலன்கள் (28-12-2015) to (03-01-2016)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ராசிக்கு செவ்வாய் பார்வை உள்ளதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிலருக்கு கோர்ட், காவல்துறை போன்ற இடங்களுக்கு போக வேண்டி இருக்கும்.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

ரிஷபம்:

மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். தந்தை வழியில் விரயங்களும் தகப்பனாரால் மனக்கஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான்.

மிதுனம்:

குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம்.

கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்த வாரம் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரம்.

அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். சிலருக்கு ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு உண்டு.

கடகம்:

இந்தவாரம் எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். அதேநேரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாகவும் இது அமையும். செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது.

சூரியன் வலுவாவதால் இந்த வாரம் சுயதொழில் புரிவோருக்கும் நல்ல வருமானம் இருக்கும். வாரஇறுதியில் அரசுஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் சித்திக்கும். பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். நீங்கள் சொல்வது ஒன்று. பிள்ளைகள் செய்வது ஒன்றுமாக இருக்கும். ஒரு சிலருக்கு தாயார் மூலம் மனக்கஷ்டங்களும் வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் அம்மாவைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்:

தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும்.

சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.

கன்னி:

யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. வார ஆரம்பத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

உடல்நலம் மனநலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் கூடி வரும் தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல வாரம் இது.

துலாம்:

சுக்கிரன் வலுப்பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும் வகையில் சில ஆரம்பங்கள் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.

சிறு கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் வழியில் செலவுகளும் மனக்கஷ்டங்களும் இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வெகு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும்.

விருச்சிகம்:

பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கையில் முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஏழரைச்சனி அடுத்த முப்பது வருடங்களுக்கு நீங்கள் நல்ல முறையில் வாழ்வதற்கான அனுபவத்தையும், யார் நல்லவர் யார் கெட்டவர், எது நல்லது எது கெட்டது என்ற அனுபவத்தையும் தரும் என்பது ஜோதிட ரகசியம்.

எனவே இப்போது சனிபகவானால் உங்களுக்கு கிடைக்கும் சில அனுபவங்கள் கசப்பாக இருந்தாலும் இன்னும் சில் மாதங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது சனி ஜென்மச்சனி எனும் நிலையிலிருந்து மாறி பாதச்சனியாக மாறி நன்மைகள் தரப் போகிறார் என்பதால் விருச்சிக ராசிக்கு இனி வேதனைகள் எதுவும் இல்லை.

தனுசு:

அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதே போல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். ஆறாமிடம் வலு இழப்பதால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.

மகரம்:

செவ்வாய் ராசியை பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்திற்கும் எரிச்சல்படுவீர்கள் என்பதோடு கோபமும் அடிக்கடி தலைகாட்டும். அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும் என்றாலும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்குப் பின்பு நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியும். குறிப்பிட்ட சிலருக்கு வடக்கு நோக்கிய பயணம் இருக்கும்.

இந்த வாரம் எதிலும் சிறிது தடைகளும் தாமதங்களுமாக இருக்கும். அதே நேரத்தில் அந்தஸ்து கௌரவத்திற்கு எந்த வித குறைவும் வராது. பணவரவும் திருப்தியாக இருக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் இருக்கின்றன. இளைய பருவத்தினரை அவர்களது பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புக்கள் சேரும்.

கும்பம்:

உங்களின் அந்தஸ்து கௌரவம் சிறப்பாக இருக்கும் வாரம் இது. பெரும்பகுதி நாட்களில் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதால் பணவரவிற்கும் குறைகள் இருக்காது. புதனின் வலுவால் முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரிகளுக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல பலன்கள் இருக்கும்.

பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். கும்பத்திற்கு இந்த வாரம் தொட்டது துலங்கும்.

பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள்.

மீனம்:

திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். சுக்கிரன் மறைவது உங்களுக்கு சிறப்பான நிலை என்பதால் ஏதாவது சேமிக்க முடியும்.

பெண்களுக்கும் இந்த வாரம் நல்ல வாரமே. மாமியாரை உங்கள் பேச்சைக் கேட்க வைப்பீர்கள். தனாதிபதி வலுப்பெறுவதால் தகுந்த நேரத்திற்கு பணம் வந்து அனைத்தும் சமாளிக்கப்படும் யோகாதிபதிகள் வலுப்பெற்றுள்ளதால் குறிப்பிட்ட சில மீனராசிக்காரர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும்.
.

3 comments :