Tuesday, 1 December 2015

மிதுனம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

மிதுனம்:

மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதாலும் மாத ஆரம்பத்தில் யோகாதிபதி சுக்கிரன் நீசநிலை நீங்கப் பெறுவதாலும் டிசம்பர் மாதம் மிதுன ராசிக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும்.

மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத பணவரவுகளும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் உங்களுக்கு இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். செவ்வாய் வலுப்பெறுவதால் அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.. எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.

1,3,5,7,8,9,17,18,19,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 8 மணி முதல் 16-ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்டதூரப் பயணங்களைத் தள்ளி வைக்கவும். புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment