Tuesday, 1 December 2015

மீனம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

மீனம்:

ராசிநாதன் ஆறில் மறைந்தாலும் இந்த மாதம் பத்தாமிடத்தில் அமர்ந்திருக்கும் சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகள் மீனத்திற்கு சாதகமாக முடியக்கூடிய திருப்பங்கள் உள்ள மாதமாக டிசம்பர்மாதம் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நெடுநாட்களாக வராது என்று கைவிட்ட தொகையும் இந்தமாதம் சுலபமாக கிடைப்பதும் நடக்கும்.

இந்தமாதம் சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண்விரயங்களும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இருக்கும். என்னதான் பிரச்னை என்றாலும் ராசிநாதன் வலுவுடன் இருப்பதால் அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

2,3,4,5,10,12,16,17,18,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எவருடனும் வீண்வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இந்த நாட்களில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

1 comment :

  1. Guruji vanakkam
    Chennai thiruvallur cudalore kanchipuram l ulagam ariyum alavu padhippugal. Inda madhiriyana padhipugalukku grahagalin nila, i epdi irundhal inda madhiri padhippugal varum

    ReplyDelete