Tuesday, 1 December 2015

துலாம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராகுவின் பிடியில் இருந்து விலகி நீசநிலையும் மாறி இந்த மாதம் ராசியில் இருக்கும் நிலை பெற்றுள்ளதால் துலாம் ராசிக்காரர்களின் கௌரவமும் மதிப்பும் உயரக்கூடிய சம்பவங்கள் நடக்கும் மாதமாக டிசம்பர் மாதம் இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து செய்யும் முயற்சிகள் அனைத்தும் இந்த மாதம் வெற்றியாக முடியும்.

இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் இருக்காது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

சிலருக்கு பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் சொல்பேச்சை கேட்பார்கள். வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு.

2,3,4,9,10,12,13,14,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 10 மணி முதல் 25-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிதாக எதையும் ஆரம்பிக்க கூடாது. மனம் இந்த நாட்களில் நிலையில்லாமல் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment