ராசிநாதன் ராசியை பார்ப்பதும் யோகாதிபதி சுக்கிரன் இழந்த வலிமையை திரும்ப அடைந்திருப்பதும் மகரராசிக்கு நல்லபலன்கள் நடக்கப்போவதை சுட்டிக்காட்டும் அமைப்புகள்
என்பதால் டிசம்பர்மாதம் மகரத்திற்கு நன்மையான திருப்பங்கள் உள்ள மாதமாக இருக்கும். சிலருக்கு பணவரவில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் மாதமாகவும் இது
இருக்கும்.
இந்த மாதம் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் உள்ள மாதமாக இது இருக்கும். அதே நேரத்தில் வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும்.
குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும்.
சுக்கிரன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். பழைய
கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு
வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு
வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது
நல்லது.
4,5,6,11,12,17,18,21,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 4-ம் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில்
புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். எனினும் சந்திரன் குருவுடன் இணைவதால் கெடுதல் எதுவும் நிச்சயம் நடக்காது.
No comments :
Post a Comment