Tuesday, 1 December 2015

கடகம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

கடகம்:

மாதம் முழுவதும் இரண்டில் குருபகவான், மூன்றில் செவ்வாய் என இரண்டு பெரும் கிரகங்களின் அமைப்பும் நன்மைகளைத் தரும் நிலையில் இருப்பதால் கடகராசிக்கு டிசம்பர்மாதம் நல்லபலன்களைத் தரும் என்பதோடு நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் விஷயங்களும் சாதகமாக முடியும் மாதமாகவும் இருக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது. பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இந்த மாதம் எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

1,2,4,5,6,10,12,13,14,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மதியம் 1 மணி முதல் 18-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எவரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக கூட்டு முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் ஆரம்பிக்க வேண்டாம்.

No comments :

Post a Comment