Tuesday, 1 December 2015

தனுசு: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

தனுசு:

டிசம்பர் மாதம் ராசிநாதனும், சூரியனும் பரிவர்த்தனை அடைவதால் குருபகவான் ராசியிலேயே இருக்கும் நிலை உண்டாகி இந்த மாதம் தனுசுராசிக்கு பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் மாதமாகவும், தொட்டது துலங்கும் மாதமாகவும் இருக்கும் என்பது உறுதி. குறிப்பிட்ட சிலருக்கு நீண்டநாட்களாக கேட்டும் கிடைக்காத விஷயங்கள் இந்தமாதம் அதிக முயற்சியின்றி கிடைக்கவும் செய்யும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும். வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. இதுவரை செட்டில் ஆகாத நடுத்தர வயது தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும் பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி தருவார்கள். சிலருக்கு மனைவி வழி சீதனமாக ஏதேனும் ஒரு நன்மை நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அலுவலகங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவைகள் இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும், குழந்தைகளுக்கான சுபகாரிய முன்னேற்பாடுகளும் நடந்து உங்களை சந்தோஷப்படுத்தும். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணியும் தொழில் புரிபவர்களுக்கு இந்த மாதம் குறிப்பிடத்தக்க நல்ல பலன்களை செய்யும்.

2,3,4,5,10,11,13,18,20,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 29-ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகள், முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

No comments :

Post a Comment