Tuesday, 1 December 2015

விருச்சிகம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

விருச்சிகம்:

பத்தாமிடத்தில் இருக்கும் குருபகவானும், பத்துக்குடைய சூரியனும் இந்த மாதம் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் இரண்டு பத்தாமிடங்கள் வலுப்பெற்று விருச்சிக ராசிக்காரர்களின் நிதிநிலைமையும், குடும்ப நிலைமையும் டிசம்பர் மாதம் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்பதால் விருச்சிக ராசிக்கு இந்த மாதம் வேதனைகள் எதுவும் இல்லை.

செவ்வாய் பதினொன்றாமிடத்தில் வலுப்பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் முடிவுக்கு வரத்துவங்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். இளையபருவ விருச்சிக ராசிக்காரர்கள் சிலர் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் கலங்கத் தேவை இல்லை. 2016ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும்.

சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம். எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. நன்றாகப் பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். காரணமின்றி உங்களுக்கு உங்கள் மீதே கோபம் வரும்.

5,6,8,11,16,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 27-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்டதூரப் பிரயாணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. புதிய தொடக்கங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

5 comments :

  1. R.isravelraj
    29/11/1989. 6:15am
    viruchika lakanam laknathil suriyan santiran puthan 2ilsukran sani 3il ragu 8il guru 9il kethu 12il sevvai. Tarmakarmapathi yogam ullatha. Palangal

    ReplyDelete
  2. அறுதல் தரும் பலன்கள்

    ReplyDelete
  3. vanakam sir 7ku7il nechanu nechanum parvai patral ena palan(guru -maharam chavaai-kadakm)

    ReplyDelete